மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசே நடத்தும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நடப்பாண்டில் மருத்துவக் கலந்தாய்வை மாநில அரசே நடத்தும், அதனை ஒன்றிய அரசுஉறுத செய்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதாவது, நாட்டில் உள்ள 100% மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வு நடத்த சமீபத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனை பெற்று ஒன்றிய அரசுக்கு ஆட்சேப கருத்து அனுப்பப்பட்டது என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.