ராமநாதபுரத்தில் இன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல்.!
ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.