கோயிலில் மருத்துவ மையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்!
தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோயில் மற்றும் சங்கரன் கோயில்களில் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது முதலமைச்சருடன் தலைமை செயலாளர் இறையன்பு, இந்து சமயஅறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.