தென் மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்.!

ma subramanian

கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள் ஆளாகினர்.

உண்ண உணவின்றி அருந்த தண்ணீரின்றி தவித்து வந்தனர். இப்பொது நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது. இந்த நிலையில், வெள்ளம் பாதிப்பு குறித்து நேற்றைய தினம் தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தூத்துக்குடி வருகை தந்தார்.

அங்கு, அரசு மருத்துவமனையை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 190 வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி முதல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வரும் வேளையில், இன்றும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

ஜார்கண்ட் : ரயில் தண்டவாளத்துக்கு வெடிவைத்த நக்சலைட்டுகள்.!

இந்த முகாமில், ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று, காசநோய் கண்டறிதல் போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  மேலும், நேற்று மட்டும் 2,882 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 67 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்