ஊடகம் நமெக்கெல்லாம் ஊன்றுகோல் – அண்ணாமலை அறிக்கை

Default Image

மாற்றுக் கட்சியின், மதிப்புக்குரிய சில ஊடகங்கள், நமக்கு எதிராக சாகசங்கள் செய்தாலும், அதை நம் சாதுரியத்தால்தான் வெற்றி கொள்ள வேண்டும் என அன்னமலை அறிக்கை. 

நேற்று கமலாலயத்தில், சகோதரி ஒருவர் மயக்கமுற்று சரிந்த போது, அதை ஊடகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயன்றபோது, ஊடகத்தினருக்கும், பாஜகவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஊடகம் நமக்கெல்லாம் ஊன்றுகோல் போல, பல சமயங்களில் தாயின் வாஞ்சையோடு வாழ்த்திடவும். தந்தையின் கரிசனத்தோடு கண்டிக்கவும். குருவின் ஆசியோடு சொல்லிக் கொடுக்கவும், ஊடகத்தைத் தவிர, வேறு யாராலும் நமக்கு உறுதுணையாக வர முடியாது. மாற்றுக் கட்சியின், மதிப்புக்குரிய சில ஊடகங்கள், நமக்கு எதிராக சாகசங்கள் செய்தாலும், அதை நம் சாதுரியத்தால்தான் வெற்றி கொள்ள வேண்டும்.

நேற்று கமலாலயத்தில், சகோதரி ஒருவர் மயக்கமுற்று சரிந்த போது, அதை ஊடகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயன்றபோது, மயக்கமுற்ற சகோதரிக்கு முதல் உதவிகள் செய்யும் அவசரத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும், அனைத்து தரப்பிலும் விசாரித்து அறிந்து கொண்டேன். என் வருத்தங்களையும் பகிர்ந்து கொண்டேன்.

எதிர்பாராமல் ஏற்படும் இது போன்ற நிகழ்வின்போது தான், கண்ணியம் காத்து, கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு. நம் பாரதிய ஜனதா கட்சியின் பெருமையினை நாம் அனைவரும் நிலைநாட்ட வேண்டும்.

அரசியல் பணிகளிலும், ஆக்கப்பூர்வ தொண்டுகளிலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு கொண்டிருக்கும், நம் தொண்டர்கள் அனைவரும், ஊடக மேலாண்மையும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். ஊடகங்கள் தங்கள் கடமையைச் செய்ய நீங்கள் உரிய துணை செய்தால், அவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் பக்க பலமாக இருப்பார்கள், மக்கள் தொடர்புக்கு பாலமாக இருப்பார்கள்.

ஆகவே, புரவிகளோடு போருக்கு நீங்கள் புறப்படும்போது, கருவிகளோடு வந்து, கடமை செய்யும் ஊடகத்தையும், கவனிக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்