அடுத்த 6 மாதத்திற்குள் மீடியாவை கட்டுக்குள் வைக்கலாம் – அண்ணாமலை ..!
அடுத்த 6 மாதத்திற்குள் மீடியாவை கட்டுக்குள் வைக்கலாம் என பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த ஆறு மாதத்திற்குள் நீங்கள் பார்ப்பீர்கள் மீடியாவை கன்ட்ரோல் செய்யலாம், கையில் எடுக்கலாம். காரணம் என்னவென்றால் தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. முன்னாள் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராக உள்ளார்.
அனைத்து ஊடகங்களும் எல்.முருகனின் கீழ்தான் வரவுள்ளன. ஏனென்றால் தொடர்ந்து தப்புகள் நடைபெற முடியாது. தப்பான ஒரு செய்தியை தொடர்ந்து செய்ய முடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது நிச்சயம் உடைப்போம் என்று தெரிவித்தார்.