கோவை மாவட்டம் முழுவதும் இன்று முதல் இறைச்சி கடைகள் இயங்காது
கோவை மாவட்டம் முழுவதும் இன்று முதல் இறைச்சி கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது .ஆனால் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இறைச்சிக்கடைகளில் இறைச்சி வாங்கியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில்,கோவை மாவட்டம் முழுவதும் இன்று முதல் இறைச்சி கடைகள் இயங்காது. மறுஉத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் முழுவதும் நாளை முதல் இறைச்சி கடைகள் இயங்காது. மறுஉத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். #Covid19 பரவுவதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். #TN_Against_Corona #TNCoronaWarriors
— SP Velumani (@SPVelumanicbe) April 11, 2020