லஞ்சமாக இறைச்சி! பணத்தை வாரி இறைக்கும் திமுக – அண்ணாமலை புகார் கடிதம்!
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்.
தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம்:
பணத்தை வாரி இறைக்கும் திமுக:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற திமுக பணத்தை வாரி இறைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவரை அண்ணாமலை புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. முறைகேடாக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பணம் விநியோகம் தொடர்பான ஆடியோ கிளிப்:
கடந்த ஜன.29ம் தேதி, திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களும், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் பண விநியோகம், விநியோக மையம் மற்றும் பணம் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு குறித்து விவாதித்த ஆடியோ கிளிப்பை வெளியிட்டோம். பிப்.11 அன்று, ஈரோடு கிழக்கில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், திருப்பூர் மாவட்டம், திமுக தெற்கு ஒன்றியப் பொருளாளர் சர்புதீனின் காரில் இருந்த டோக்கன்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
லஞ்சமாக இறைச்சி – அண்ணாமலை குற்றச்சாட்டு:
கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கினர். அங்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள திமுக அமைச்சர்களுடன் இருந்தால், நாள் ஒன்றுக்கு வாக்காளர்களுக்கு 1000 ரூபாயும், வாக்காளர்கள் தொடர்ந்து 20 நாட்கள் அமர்ந்திருந்தால் ஊக்கத் தொகையாக 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது என குற்றசாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரின் பரப்புரையை மட்டுப்படுத்தும் நோக்கில் இது செய்யப்படுகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் பணப்புழக்கம் பற்றி மாநில தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனநாயகத்தின் உணர்வைக் கொன்ற திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
The @arivalayam govt in power has unfurled the Thirumangalam formula and a representation on behalf of @BJP4TamilNadu has been submitted to @ECISVEEP today for the conduct of a free & fair election in Erode East. pic.twitter.com/kDboAjtDsK
— K.Annamalai (@annamalai_k) February 14, 2023