காவிரியில் மருத்துவக்கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் மெய்யநாதன்
ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின்படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தகவல்.
காவிரி ஆற்றில் மருத்துவக்கழிவு, பூச்சிக்கொல்லி, உலோக கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். காவிரியில் மருத்துவ மாசு அதிகமுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவிரி ஆற்றில் கழிவுகள் கலக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரியில் சென்னை ஐஐடி கூறிய இடங்களில், தமிழக அரசு அமைத்த குழு நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. காவிரியில் மருத்துவக்கழிவுகள் அதிகமுள்ளதாக ஐஐடி நிபுணர் குழு ஆய்வில் தெரிய வந்த நிலையில், அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டியிருக்கிறார்.
காவிரி ஆறு மாசுபடுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் அறிக்கை#TNGovt #ministermeyyanathan pic.twitter.com/JweZQTCShn
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 9, 2021