என்னையும், முதல்வர் பழனிசாமியையும் பிரிக்க முடியாது-பன்னீர்செல்வம்
என்னையும், முதல்வர் பழனிசாமியையும் பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அண்ணாவின் இருமொழி கொள்கை தான் எங்களது கொள்கையும் இருமொழிக் கொள்கை என்பது தான் தமிழக அரசின் உயிர்நாடி,அதில் பின்வாங்க மாட்டோம்.
ஏற்கனவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருந்து பின்பு நீக்கப்பட்டது, தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.நானும் முதலமைச்சர் பழனிசாமியும் நல்ல புரிதலோடு இருக்கிறோம் யார் எவ்வளவு முயன்றாலும் என்னையும், முதல்வர் பழனிசாமியையும் பிரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.