உதய சூரியனுக்கு “நோ”.! பம்பரம் சின்னத்தில் தான் போட்டி.! மதிமுக திட்டவட்டம்.!
MDMK நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
READ MORE- இறுதிக்கட்டத்தை எட்டியது திமுக கூட்டணி தொகுதி பங்கீடு! இன்று ஒப்பந்தம் கையெழுத்தா?
சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கி உள்ளது.
இந்நிலையில், மதிமுக உடன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் பேட்டியளித்தார். அப்போது”ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்க வேண்டும் என திமுக-விடம் கேட்டுள்ளோம். அதுவும் எங்களது மதிமுக சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம் இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என தெரிவித்தார்.
READ MORE- அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.! இன்று விசாரணை…
கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.