நெல் ஜெயராமன் மறைவுக்கு மதிமுக பொது செயலாளர் இரங்கல்….!!!
நெல் ஜெயராமன் மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெற்களஞ்சியமான நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5:10 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது. மதிமுக பொது செயளாலர் வைகோ இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவானை இழந்து விட்டார்கள். பாரம்பரிய நெல்வகைகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன் என்று கூறியுள்ளார்.