ஈழத்தமிழர் பிரச்னையின் போது வைகோவின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.! திருமாவளவன் பேட்டி.!
ஈழத் தமிழர் போராட்ட விவகாரத்தில் மதிமுக தலைவர் வைகோவின் பங்கு மகத்தானது. அது மறுக்க முடியாதது என்று திருமாவளவன் பேட்டி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிடுகையில், ஈழத்தமிழர் விவகாரத்தை வைத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் அரசியல் செய்ததாக கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு மதிமுக தரப்பு வருத்தம் கலந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மதிமுக வருத்தம் : மதிமுக முக்கிய பொறுப்பாளர் ராஜேந்திரன் என்பவர் இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் மதிமுக தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக திருமாவளவன் இன்றும் இருக்கிறார். ஆனால், அவர் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒரு பொதுவான கருத்தை அவர் கூறியுள்ளார். என்றும்,
வைகோ – ஈழத்தமிழர் : ஈழத்தமிழர் விவாகரத்திற்காக 1981 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர் வைகோ. மேலும், விடுதலை புலிகளை ஆதரித்த காரணத்தால் பல்வேறு அரசியல் இழப்புகளை தமிழகத்தில் சந்தித்தவர் வைகோ என தங்களது வருத்தங்களை பதிவு செய்து இருந்தனர்.
திருமாவளவன் விளக்கம் : இந்த அறிக்கை குறித்து நேற்று நாகர்கோவிலில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் ஈழத் தமிழர் போராட்ட விவகாரத்தில் மதிமுக தலைவர் வைகோவின் பங்கு மகத்தானது. மேலும், அது மறுக்க முடியாத ஒன்று என்று குறிப்பிட்டார். பல்வேறு தலைவர்களும் அவர்களது திறனுக்கு ஏற்ப தங்களது எதிர்ப்புகளை வெளிக்காட்டி வந்தனர் என்றும் திருமாவளவன் பேசியிருந்தார்.