சென்னை: மதிமுக தலைவர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
நேற்று நாகர்கோவிலில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்து இருந்தார். சகோதரர் வீட்டில் தங்கி இருந்த வைகோ இரவில் வீட்டிற்குள் தவறி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்து இருந்தார்.
மேலும், உடனடியாக நெல்லையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் அழைத்துவரப்பட்டு விமானம் மூலம் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார் வைகோ. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவிற்கு இன்று தோள்ப்பட்டையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான காயம் என்றும் , சிகிச்சைக்கு பின்னர் மதிமுக தலைவர் வைகோ பூரண நலம் பெறுவார் அதனால் கட்சியினர் அச்சம் கொள்ள வேண்டாம் என துரை வைகோ முன்னதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…