காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! 

Minister Udhayanidhi stalin - MDMK Party Leader Vaiko

கடந்த வருடம் செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட 25) மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் துவங்கிப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில்  உணவு பரிமாறி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவியருடன் கலந்துரையாடியபடி  உணவருந்தினார்.   தமிழ்நாட்டில் உள்ள 31,008 தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது; இதன்மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள்

அதே போல, சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.  மேலும், சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

மற்ற ஊர்களிலும் அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்