மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!
அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.
![Vaiko - Apollo Hospital](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/11/Vaiko-Apollo-Hospital.webp)
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில், அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
அந்த அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.