அறவழி விவசாயப் புரட்சி! காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்

Published by
Venu
கேடுகெட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்துச் செய்ய வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 62 நாட்களாக நியாயமான கோரிக்கைகளுக்காக வாட்டி வதைக்கும் உறை பனியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடந்தது இல்லை.
குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து, கேடுகெட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்துச் செய்ய வேண்டும்.நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து, அடக்குமுறையின் மூலம் விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் என்று கருதினால் விபரீத முடிவே ஏற்படும். அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு ஆகும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/TheVaiko/posts/3751293054930613

Published by
Venu

Recent Posts

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் பற்றிய முக்கிய அப்டேட்!

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் பற்றிய முக்கிய அப்டேட்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து…

1 hour ago

அடேங்கப்பா!! புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? இல்லத்தரசிகளுக்கு ஷாக்..

சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு…

1 hour ago

INDvsENG: நாளை முதல் ஒருநாள் போட்டி… தீவிர பயிற்சியில் இந்திய அணி! Biceps-ஐ காட்டி கிங் கோலி பதிலடி.!

நாக்பூர் : 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள்…

2 hours ago

LIVE : ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் முதல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரை.!

சென்னை : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.…

3 hours ago

கார் மீது ஆட்டோ மோதி விபத்து… நடுரோட்டில் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த ராகுல் டிராவிட்.!

கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள்  கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…

3 hours ago

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…

4 hours ago