நாளை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டிருந்தது.
அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வேட்பாளர்களை மதிமுக தற்போது வெளியிட்டுள்ளது. நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி துணை மேயராக எஸ். சூரியகுமார் போட்டியிடுகிறார். இதுபோன்று மாங்காடு நகராட்சியின் தலைவர் பதவிக்கு மதிமுக வேட்பாளர் சுமதி போட்டியிடுகிறார்.
பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சிகளின் துணைத் தலைவர் பதவிகளும் மதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக அணியில் திருவேங்கடம், ஆடுதுறை, சென்னசமுத்திரம் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மதிமுக கட்சி போட்டியிடும். பாளையம், அவல்பூந்துறை, அரச்சலூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும் திமுக அணியில் மதிமுக கட்சி போட்டியிடும்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…