தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் (TANCET) நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
டான்செட் நுழைவுத்தேர்வை எழுத, தமிழகம் முழுவது 38 ஆயிரத்து 395 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஹால் டிக்கெட்டுகளை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப் பட்டிருந்தது.
முதல்கட்டமாக நேற்று, எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கான தேர்வு நடைபெற்றது. இன்று எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 27 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகம், கந்தன்சாவடி தங்கவேலு பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 7 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு, 12 மணி வரை நடைபெறுகிறது. டான்செட் தேர்வு முடிவுகள் ஜூன் 2-ஆம் வாரம் வெளியான பின்னர், தனித்தனியே கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…