MBBS கட்டண வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிமன்றம்.!
தகுதி மற்றும் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி மாணவிகள் தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 7.5% இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்களை நிரப்ப 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தகுதி மற்றும் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.