எம்பிபிஎஸ் கலந்தாய்வு நாளை தொடக்கம் – தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு குழு அறிவிப்பு
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை காலை தொடங்குகிறது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என்று தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு குழு அறிவித்துள்ளது. தரவரிசை பட்டியல் கடந்த வாரம் வெளியான நிலையில், எம்பிபிஎஸ் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு 20ம் தேதி தொடங்கிய நிலையில், நாளை முதல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.
அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறுகிறது. நாளை முதல் 31-ஆம் தேதி வரை 7 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நீட் தேர்வு எழுதிய சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.