சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் பிரியா!
தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதன்பின் நேற்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக தாக்கல் செய்து வைத்தார்.
இதனிடையே, சென்னை மாநகராட்சி 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று மக்கள் நீதி மய்யம் 7-ம் ஆண்டு தொடக்க விழா..!
அப்போது, சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார். அதன்படி, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 82 அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டு வருகிறார். அதில், தொழில்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த புதிய பொருட்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024-25ம் கல்வியாண்டில் மொத்தம் 419 பள்ளிகளில் பயிலும் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 2 வீதம் 1,20,175 மாணவர்களுக்கு ரூ.8.50 கோடி மதிப்பில் சீருடைகள் வழங்கப்படும். 255 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.7.64 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்க ரூ.3.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார் மேயர் பிரியா.