தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் இருந்த நிலையில், இன்று 38-வது மாவட்டமாக உதயமாகிறது மயிலாடுதுறை. காணொளி காட்சி மூலம் புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி, வேலூர் மாவட்டங்களில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு என மொத்தம் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவானது.
இதனையடுத்து, இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசு ஆணை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காலை 9:30 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொளி காட்சி வழியாக மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது.
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…