“சத்தியமங்கலம் மாயாற்றில் வெள்ளபெருக்கு”ஆற்றில் பயணம் செய்யும் மக்கள்…பாலம் வேண்டும் அரசிற்கு கோரிக்கை…!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து ஆனால் மக்கள் பரிசலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவே மக்கள், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக மட்டுமே உள்ள கரடுமுரடான மண்சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. நீலகிரி மாவட்டம் சோலூரிலிருந்தும் ஒரு பேருந்தும், கோவையிலிருந்த ஒரு பேருந்தும் என 2 அரசு பஸ்கள் மட்டுமே இக்கிராமத்திற்கு இயக்கப்படுவதால் ஆற்றின் கரை வரை மட்டுமே பேருந்து செல்வதால் பொதுமக்கள் மாயாற்றை பரிசலில் முலம் கடந்து செல்கின்றனர்.தற்போது ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU