இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்.. கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்.!

Default Image

கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு, ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் முதலமைச்சர் வாழ்த்து.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு, ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அனபை பரிமாறி உதவும் திருநாள். தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசு என கூறியுள்ளார்.

“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்றும், “மன்னியுங்கள். நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” என்றும், “அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்.

இத்தகைய உயரிய நெறிகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறித்துவத் தோழர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நமது அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது. அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் நமது திராவிட மாடல் அரசானது கிறிஸ்தவ மக்களின் சமூக பொருளாதார – கல்வி நிலையை உயர்த்துவதிலும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியோடு உள்ளது. அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் எனவும் முதலமைச்சர் கிறிஸ்துமஸ் செய்தி வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்