‘வெற்றிகள் வந்து சேரட்டும்’ ! ராகுல்காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

ராகுல்காந்தி: காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தியின் பிறந்தநாளான இன்று, நாடுமுழுவதும் உள்ள கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி, கடந்த 1970-ம் ஆண்டு ஜுன் 19-ம் தேதி பிறந்தார். ஜவாஹர்லால் நேருவின் வம்சாவளி என அடையாளம் காணப்பட்ட ராகுல் காந்தி தற்போது தனக்கான ஒரு அடையாளத்தை தானே உருவாக்கி வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு உதாரணமாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இது போன்ற வெற்றியில் தொடர்வதற்கான முயற்சில் தீவீரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இப்போது அவர் தனது 54-வது பிறந்தநாளை அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றார்.
மேலும் பல கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது X தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், “அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் காந்தி மிக உயர்ந்த இடத்திற்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு வளர்ச்சிகளும், வெற்றிகளும் வந்துசேரட்டும்” என பதிவிட்டு வாழ்த்தியிருந்தார்.
Happy Birthday, dear brother @RahulGandhi!
Your dedication to the people of our country will take you to great heights. Wishing you a year of continued progress and success. pic.twitter.com/As1bHkTKR5
— M.K.Stalin (@mkstalin) June 19, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025