#BREAKING: நாளை திறக்கலாம், ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை அரசு திறக்கலாம், ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலிலதா நினைவு இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சேசாஷாயி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வேதா இல்ல பொருட்கள் முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தியுள்ளனர் என தீபா தெரிவித்துள்ளார்.
நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது என்றும் தீபா கூறியுள்ளார். மேலும் வழக்கு முடியும் வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025