அன்பழகன் ஆன்மா சாந்தி அடையட்டும் – குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்

Published by
Venu
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் ஒன்றை  பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன்.பேராசிரியர் என்று தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அவர் மிகச்சிறந்த பேச்சாளராகவும் அறிஞராகவும் திகழ்ந்தார். அவரது அறிவாற்றல், தாம் கொண்ட கொள்கையின் மீதான தீராத பற்று, மக்கள் நலனுக்கென அவரது உழைத்த அவரது உறுதி போன்ற குணங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Published by
Venu

Recent Posts

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

14 minutes ago

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

45 minutes ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

60 minutes ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

2 hours ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

2 hours ago

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

3 hours ago