அன்பழகன் ஆன்மா சாந்தி அடையட்டும் – குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன். pic.twitter.com/W07vSUvp8b
— Vice President of India (@VPSecretariat) March 7, 2020
அவரது பதிவில், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன்.பேராசிரியர் என்று தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அவர் மிகச்சிறந்த பேச்சாளராகவும் அறிஞராகவும் திகழ்ந்தார். அவரது அறிவாற்றல், தாம் கொண்ட கொள்கையின் மீதான தீராத பற்று, மக்கள் நலனுக்கென அவரது உழைத்த அவரது உறுதி போன்ற குணங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025