மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – நீலகிரி ஆட்சியர்
மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த நீலகிரி ஆட்சியர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வது உண்டு. இதனால் ஆண்டுதோறும் இந்த நாட்களில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20-ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வண்ணம் ஜூன் 4-ஆம் தேதி வேலை நாளாக இயங்கும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.