இவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்
ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால்,அவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்துக் கொலை செய்திருக்கிறார். கொல்லப்பட்ட நடத்துனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடி குடிப்பவரின் குடும்பத்தை மட்டுமின்றி, மற்றவர்களின் குடும்பத்தையும் கெடுக்கும் என்பதற்கு இது தான் கொடிய உதாரணம் ஆகும். நெடுஞ்சாலைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு காரணம் ஆகும். மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்!
கொல்லப்பட்ட நடத்துனர் பெருமாள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மறைவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
மிகவும் ஆபத்தான பணி செய்யும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இதுவரை தனிநபர் காப்பீடு இல்லை என்பது வருந்தத்தக்கது. அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால்,அவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான பணி செய்யும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இதுவரை தனிநபர் காப்பீடு இல்லை என்பது வருந்தத்தக்கது. அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால்,அவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும்!(4/4)@sivasankar1ss
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 14, 2022