#HeavyRain: தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் கனமழை பதிவு.!
தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பதிவு.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, இன்று காலை பரவலாக மழை பெய்தது.
கனமழை:
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று அதிகபட்சமாக 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மழை :
தூத்துக்குடியில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக பட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தூத்துக்குடியின் அண்ணாநகர் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் அரசு அலுவலர் குடியிருப்பில் மழைநீர் புகுந்தது. இதனால், முதல் தளம் வரை தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதியடைந்தனர்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் போலீசார் கடும் அவதி பட்டனர்.இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் நேரடியாக வந்து பார்வையிட்டு தண்ணீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
#WeatherUpdate pic.twitter.com/quiuL8d6ox
— RMC CHENNAI (சென்னை) (@ChennaiRmc) November 17, 2020