#Breaking : மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கு ! தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

மான நஷ்ட ஈடு கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக முதல்வர் தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ் உட்பட ஏழு பேருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச அவர்களுக்கு தடை விதிக்கவும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்க கோரி முதலமைச்சர் வழக்கு தொடர்ந்தார்..
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனுத்தாக்கல் செய்தார். பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.அதாவது வழக்கினை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் முதலமைச்சர் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் மேத்யூ சாமுவேல் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025