குட்நியூஸ்…இவர்களுக்கும் மகப்பேறு விடுப்பு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக உயர்த்துவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016 ஆம் ஆண்டில்  சட்டப்பேரவை விதி 110 கீழ் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.

இதனையடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 வருடமாக உயர்த்தப்பட்டது.இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன்,பின் என பிரித்து அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளவும்,விடுப்பு சமயத்தில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில்,அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும், குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக சந்தேகங்கள் எழுந்த நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்