இவர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை உயர்வு – தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு!
கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000 லிருந்து ரூ.18,000-ஆக உயர்த்தப்படும் என்று பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார். இதுபோன்று விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக பேரவையில் பேசிய அமைச்சர், 500 பெண் ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க உயர்மட்டக் குழு அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.