திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரரின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மகன் அளித்த புகாரில் ஓட்டுனர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கு தொடர்பு இருப்பது அம்பலமான நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் மனு தள்ளுபடி:
மஸ்தான் தம்பி கவுஸ் அசாம் பாஷா கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக கவுஸ் அசாம் பாஷா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடிந்த நிலையில், ஜாமீன் கோரி கவுஸ் அசாம் பாஷா மனு தாக்கல் செய்துள்ளார்.
மஸ்தான் மரணம்:
சொத்துக்காக திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை எனவும் விசாரணை முடிந்த நிலையிலும், ஜாமீன் தர கூடாது என போலீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, கவுஸ் அசாம் பாஷாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவரும், முன்னாள் எம்.பியுமான மஸ்தான் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவு:
மஸ்தானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில், இம்ரான் பாஷா மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதன்பின் இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது மஸ்தானின் சகோதரருமான கவுஸ் அசாம் பாஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது. இதன்பின் அவரும் கைது செய்யப்பட்டார். இணைத்த நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரிய கவுஸ் அசாம் பாஷா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…