12-ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…