நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழ்நாட்டில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு.

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. முகக்கவசம் உள்ளிட நோய் தடுப்புக்காக நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

அதன்படி, அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்டோர்  நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series