சென்னையில் 'முகக்கவசம்' கட்டாயம் மீறுவோரின் வாகனம் 3 மாதங்களுக்கு பறிமுதல்
இன்றிலிருந்து சென்னையில் வெளியே செல்லும் மக்கள் ‘முகக்கவசம்’அணிவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது .மீறுவோரின் வாகனம் 3 மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் .
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.நேற்று மட்டும் 98 பேர் பாதிக்கப்பட்டியிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார் .இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது .தமிழகத்தில் இதுவரை 58 பேர் குணமடைந்துள்ளனர் 11 பேர் உயிரிழந்துள்ளனர் .சென்னையில் மட்டும் இதுவரை 208 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் சென்னையில் இன்றிலிருந்து வீட்டை விட்டு வெளியே செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார் .இந்த உத்தரவை மீறினால் வெளியே செல்லும் அனுமதி உரிமம் பறிக்கப்படும் என்றும் மேலும் அவர்களின் வாகனங்கள் 3 மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்று கோவையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .