தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்.!

Published by
Muthu Kumar

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிப்பு.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் சற்று அதிகரித்து வரும் நிலையில், கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர்  இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அமைச்சர் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

1 minute ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

3 minutes ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

48 minutes ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

1 hour ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

2 hours ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

3 hours ago