தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்.!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிப்பு.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் சற்று அதிகரித்து வரும் நிலையில், கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அமைச்சர் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.