அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் – இன்று முதல் அமல்..!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும்
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்து வந்தது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மாஸ்க் கட்டாயம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் 100% முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.