முக்கிய பிரமுகர் கொலை: 12 ஆண்டுக்கு பின் 5 பேருக்கு இரட்டை ஆயுள் ..!

Default Image

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் ஒரு பெண் சிவக்குமார் என்பவரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதற்கான தவணையை கட்ட சென்ற அவரது மகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றினர்.

அந்தப் பதிவை நீக்கும்படி அந்த பெண்ணின் தாயார் கெஞ்சிய நிலையில் அந்த இளம்பெண்ணின் தாயாருக்கு உதவியாக போலீசில் புகார் அளித்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வேலுசாமி இரவு வீடு திரும்பிய போது கந்துவட்டி கும்பல்  அவரை வழி கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவகுமார், பூபதி, ராஜேந்திரன், கணேசன், அருன், அன்பு, ஆமையன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இதில், ஆமையன் அக்கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதில், பூபதி தலைமறைவானார். பின்னர்,இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கும் ,வேலுச்சாமி கொலை வழக்கும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது .

 நாமக்கல் விரைவு நீதிமன்றம் பலாத்காரம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் முக்கிய குற்றவாளியான ஆமையன் கொலை செய்யப்பட்டதால் முதல் குற்றவாளியான சிவகுமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 லட்சம் அபராதம் விதித்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாமக்கல் நீதிமன்றம் சிவகுமார், ராஜேந்திரன், அருண், கணேசன் மற்றும் அன்பு  ஆகியோருக்கு இரட்டை ஆயுள் வழங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்