மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நீக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருங்குளம் ஒன்றிய செயலாளர் அப்பாகுட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. கருங்குளம் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த அப்பாகுட்டி கட்சி கட்டுப்பாடுகளை மீறியும், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.