#Breaking:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் கொரோனாவால் பலி…!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனாவால் உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன்(வயது 81) கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மைதிலி சிவராமன் அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்,உறுப்பினர்கள் மற்றும் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன்,வாச்சாத்தி வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தியவர், மற்றும் வெண்மணி படுகொலை சம்பவத்தை உலகறிய செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.