தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி..?
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக முதற்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயத்தில் வந்திருந்தனர். கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 11 மணி வரை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
தாங்கள் கேட்ட எண்ணிக்கைக்கு மிகக் குறைவான தொகுதி திமுக தரப்பில் ஒதுக்குவதாக தெரிவித்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி என தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பிறகே கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேட்டி தர மறுத்தனர். பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்து மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சென்று விட்டனர்.
மார்க்சிஸ்ட் சார்பில் 12 தொகுதிகள் கேட்டதாகவும், திமுக சார்பில் 6 தொகுதிகள் தர முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.