விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு திருமணம் ஏற்பாடு செய்ததால் வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டம்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லூர் வசந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருடைய மகள் அன்பரசி மேலும் அதே பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன் இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர் , இவர்கள் இவருக்கும் காதல் அதிகமானதால் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இதை தொடர்ந்து விஸ்வநாதனுக்கு கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது . இந்த விஷியம் அன்பரசி தெரியவந்துள்ளது இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்பரசி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், ஆனால் காவல்துறை சார்பில் அன்பரசி க்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தனக்கு தன்னுடைய காதலன் கிடைக்காத மன அழுத்தத்தில் அந்தப் பெண் விஷம் அருந்தி திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து வீடு திரும்பியுள்ளார், இந்த நிலையில் விஸ்வநாதனுக்கு நாளை மறுநாள் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவது தெரிந்து, அன்பரசி காதலன் எங்கே என எழுதப்பட்ட பலகையுடன் விஸ்வநாதன் வீட்டின் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தகவலறிந்த போலீசார் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பதாக அன்பரசிக்கு உறுதியளித்ததும் அன்பரசி தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…