தமிழக, கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடியில் திருமணம் செய்துகொண்ட மணமக்கள்.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ரத்னம் மகன் பிரசாந்த் (25) இவருக்கும், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் காயத்ரி (19) என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மகணமகன் இ.பாஸ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை, மணமகனுக்கு இ.பாஸ் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழக, கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடிக்கு திருமணக்கோலத்தில் மணமக்கள் வந்தனர். இதனைப்பார்த்து, இருமாநில போலீஸ் விசாரித்தனர். இ.பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என கேரள போலீசார் மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த முகூர்த்த நேரத்தில் இருவீட்டினர் முன்னிலையில் சோதனைச்சாவடி அருகே திருமணம் செய்துகொண்டனர். எல்லைப்பகுதியில் இருந்த இருமாநில காவல்துறையினர், வருவாய்துறையினர் மணமக்களை வாழ்த்தினர். இ.பாஸ் இல்லாத காரணத்தால் மணப்பெண் கேரளாவிற்கும், மணமகன் கம்பத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…