அனுமதி கொடுக்காததால் கேரள, தமிழக எல்லையில் நடைபெற்ற திருமணம்.!

Default Image

தமிழக, கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடியில் திருமணம் செய்துகொண்ட மணமக்கள்.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ரத்னம் மகன் பிரசாந்த் (25) இவருக்கும், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த  கணேசன் என்பவரின் மகள் காயத்ரி (19) என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மகணமகன் இ.பாஸ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை, மணமகனுக்கு இ.பாஸ் அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், தமிழக, கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடிக்கு திருமணக்கோலத்தில் மணமக்கள் வந்தனர். இதனைப்பார்த்து, இருமாநில போலீஸ் விசாரித்தனர். இ.பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என கேரள போலீசார் மறுத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த முகூர்த்த நேரத்தில் இருவீட்டினர் முன்னிலையில் சோதனைச்சாவடி அருகே திருமணம் செய்துகொண்டனர். எல்லைப்பகுதியில் இருந்த இருமாநில காவல்துறையினர், வருவாய்துறையினர் மணமக்களை வாழ்த்தினர். இ.பாஸ் இல்லாத காரணத்தால் மணப்பெண் கேரளாவிற்கும்,  மணமகன் கம்பத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்