ராமநாதபுர மாவட்டத்தில் 3 திருமணங்களை செய்ததாகக் கூறும் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை 4வதாக ஒரு நபர் வந்து சொந்தம் கொண்டாடியதால் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று குழந்தைகள் நல அதிகாரிகள் குழம்பி நிற்கின்றனர்.
நடிகர் வடிவேலு காமெடியில் வருவது போன்ற நிகழ்வு நடந்துள்ளது.இந்த குழப்பமான சம்பவம் ஆனது ராமநாதபுரத்தை அடுத்த கோரவள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய 8 மாத குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு அதிரடியாக ஒரு புகார் வந்து உள்ளது.இந்த புகாரை அடுத்து விசாரிக்க விரைந்த அதிகாரிகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணை குழந்தையுடன் அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஒரு உத்தரவையும் போட்டுள்ளனர்.
அலுவலகத்திற்கு வந்த பெண்ணை விசாரித்ததில் 3 ஆண்டுகளுக்கு முன் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.இந்நிலையில் கட்டிட வேலைக்குச் செல்லும் அப்பெண் அங்கு ஏற்கனவே திருமணமாகிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபரோடு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்த விவகாரம் அப்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவரை விவாகரத்து செய்து உள்ளார்.
விவகாரம் முடிந்த கையோடு ராமநாதபுரத்திற்கு அப்பெண்ணை வினோத் அழைத்து வந்துள்ளார். அங்கு தனியாக வீடு எடுத்து தங்கவைத்து சில காலங்கள் குடும்பம் நடத்தி வந்து உள்ளார். அதன் பின் அவர் வெளிநாடு செல்வதாகக் கூறி விட்டு சென்றவர் இரண்டு மாதங்கள் பணமும் அனுப்பி உள்ளார். அதன் பின் வினோத் அங்கே இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த நான்கே மாதத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை 3வதாக திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணத்திற்குள் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் இறந்ததாக கூறப்படும் வினோத்தின் உறவினர்கள் கேட்கவே, அவர்களிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார் அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார்.இந்நிலையில் தான் பென் குழந்தையை அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.இதனை கேட்டு கொண்டிருக்கும் போதே அதிகாரிக்கு தலைசுற்றி கொண்டிருந்த நிலையில் அது தன்னுடைய குழந்தை என்று ம 4வதாக ஒருவர் அதிகாரிகளிடம் புகாரளித்து உள்ளார்.
புகார் அளித்தவர் உத்திரகோசமங்கையைச் சேர்ந்தவர் அவர் பெயர் சரத் என்கிற வேல்முருகன் என்று தெரிவந்துள்ளது.ஐய்யோ கண்ண கட்டுதே என்று அதிகாரிகள் குழப்பத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.புகார் குறித்து சரத் கூறுகையில் 2வது கணவரான வினோத் வெளிநாடு சென்ற போது அந்தப் பெண்ணுடன் தாம் பழகியதாகவும் அதன் மூலம் பிறந்ததே பெண் குழந்தை என்று கூறியுள்ளார். இந்நிலையில் சரத்தின் புகாரை மறுக்கும் அந்தப் பெண், அது வினோத்தின் குழந்தைதான் என்று கூறுகிறார்.இந்த விவகாரத்தால் நொந்துபோன அதிகாரிகள் குழந்தை காப்பகத்தில் அக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு டி.என்.ஏ பரிசோதனைக்காக நீதிமன்றத்தை நாடுமாறு கூறி குழ்ந்தைக்கு உரிமை கொண்டாடிய சரத்தையும் அந்தப் பெண்ணையும் அனுப்பி வைத்தனர். இத்தகைய சூழலில் இரண்டாவது முறையாக அப்பெண் கர்ப்பம் தரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…